சென்னை,
3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசின் அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ரூபேஷ்குமார் மீனாவிற்கு பதில் குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக இருந்த ரூபேஷ்குமார் மீனா, திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராக இருந்த காமினி ஐ.பி.எஸ்., காவல்துறை தலைமைய நிர்வாக ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.