தமிழக செய்திகள்

ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சா பறிமுதல்!

ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்

இந்த நிலையில் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்த மங்களூரு-சென்ட்ரல் விவேக் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22851) ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் முன்பக்க பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 3½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.