திருநெல்வேலி மாவட்டம், மானூர் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா மகன் சதீஷ் (வயது 23) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் சதீஷ், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
இதேபோல் தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ்(34) மற்றும் ராமையன்பட்டியை சேர்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ்(28) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.