தமிழக செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த மோகித் (வயது 22), மேலஅலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்தவர்களான ரித்தீஷ்(19), திலோத்பெர்லின்(21) ஆகிய 3 வாலிபர்களும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.

3 வாலிபர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது:

இந்த நிலையில் மேற்சொன்ன 3 வாலிபர்களையும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.