தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான முருகேசன் (வயது 59), இசக்கிராஜா(22) மற்றும் விருதுநகரை சேர்ந்த கோபால்சாமி(47) ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 3 பேரையும், நேற்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 25 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.