கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கமல்யூசுப் (வயது 27), மாதவலாயம், மைதீன்புரம் பகுதியை சேர்ந்த ஷாஜகான்(22), சிறமடம், ஞாலம் பகுதியை சேர்ந்த புரூஸ்லீ(35) ஆகிய 3 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ (1.5 கிலோ) கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.