தூத்துக்குடி,
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளான 3 நபர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் எஸ்.பி. பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகர் மாரிமுத்து மகன் சிவா(எ) ஜீவா (வயது 20), அம்பேத்கர் நகர் 1-வது தெரு, சேகர் மகன் சந்திரன்(23), அம்பேத்கர் நகர் 4-வது தெரு, வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ்(எ) பம்பு(25) ஆகிய 3 பேரையும் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
தூத்துக்குடி நகரில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என காவல்துறை எச்சரித்துள்ளது.