தமிழக செய்திகள்

எலி மருந்து தடவிய தேங்காயை சாப்பிட்ட 3 பெண்கள் மயக்கம் மருத்துவமனையில் அனுமதி

எலி மருந்து தடவிய தேங்காயை தெரியாமல் நிகிதா, சவிதா, மதுமிதா ஆகிய 3 இளம்பெண்கள் எடுத்து சட்னி வைத்து சாப்பிட்டுள்ளனர்.

சென்னை,

விருகம்பாக்கத்திலுள்ள விவேகானந்தா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வசித்துவருகின்றனர். இந்த குடியிருப்பில் 7 பெண்கள் கணினி பயிற்சிகாக ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கியுள்ளனர். வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் சாய்ரா என்ற பெண் தேங்காயில் எலி மருந்து தடவிவைத்துள்ளார்.

இந்த நிலையில், எலி மருந்து தடவிய தேங்காயை நிகிதா, சவிதா, மதுமிதா ஆகிய 3 இளம்பெண்கள் எடுத்து சட்னி வைத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. எலி மருந்து தடவிய தேங்காயை சாப்பிட்டதால் 3 பேருக்கும் வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை சக தோழிகள் கே.கே.நகர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விருகபாக்கம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT