திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் மகன் குருவிக்னேஷ் (வயது 20), முருகன் மகன் பந்தலமகாராஜன்(21), செல்லபாண்டியன் மகன் வினோபாலா(20) ஆகிய 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொனன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.