நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை, கொக்கிரகுளம் பகுதியில் காலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த வேலுசாமி (வயது 54) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அவரிடமிருந்து 4 கிராம் தங்க மோதிரம், செல்போன் மற்றும் பணம் ரூ.6 ஆயிரம் என மொத்தம் ரூ.56 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை பறித்து சென்றனர்.
இதுகுறித்து அவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விரைந்து விசாரணை மேற்கொண்டு 7 மணி நேரத்திற்குள் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களான டவுண் பகுதியை சேர்ந்த முகமதுஅனாஸ்(25), மகிழ்வண்ணநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார்(26), பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த ஆனந்த்(27) ஆகிய 3 பேரிடமிருந்து மேற்சொன்ன பொருட்களை மீட்டு, அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.