தமிழக செய்திகள்

தவெகவில் 30 எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்: செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி

தவெக ஆட்சிக்கு எதிராக பிரதமர் மோடி சாட்டையை சுழற்ற போகிறார் என்று செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை,

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளை குறை சொல்லி விஜய் ஆட்சியை பிடித்தார். தற்போது 3 வயது முதல் 60 வயது பெண்கள் வரை பாதுகாப்பில்லை. தமிழக வெற்றிக் கழகம் தமிழக பாலியல் வெறி கழகமாக மாறி உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் சமூக விரோத செயல்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார்.

தீபாவளி அன்று 17 கொலைகள் நடந்துள்ளதே த.வெ.க. ஆட்சி யில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதுக்கு சாட்சி. ஆனால் எதற்கும் முதல்-அமைச்சர் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். தவறு செய்த எம்.எல்.ஏ.க்களை முதல்-அமைச்சர் விஜய் அழைத்து லியோ படப்பாணியில் கண்டிப்பார் என பார்த்தால் பட்டு சேலை, சட்டை, வேட்டி கொடுத்துள்ளார்.

த.வெ.க.வில் 30 எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானம் செய்யதான் முதல்-அமைச்சர் அழைத்து பேசியுள்ளார். த.வெ.க. ஆட்சிக்கு அ.தி.மு.க. சார்பில் 6 மாதம் அவகாசம் கொடுத்தோம். இனி ஆட்சியை கண்டித்து வாரந்தோறும் போராட்டம் நடத்துவோம். பிரதமர் மோடி, த.வெ.க. ஆட்சிக்கு எதிராக சாட்டையை சுழற்ற போகிறார். அவருக்கு, தமிழக முதல்-அமைச்சர் பதில் சொல்கிற காலம் வரும். விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT