மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மது பாட்டில்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.