தமிழக செய்திகள்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 3.04 லட்சம் பேர் மாயம்: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை தாக்கல்

தமிழ்நாடு போலீசாரின் நடவடிக்கையை பாராட்டுவதாக நீதிபதிகள் கூறினர்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் காணாமல் போயுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

எத்தனை பேர் காணவில்லை?

சென்னை ஐகோர்ட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் காணாமல் போன தன் கணவர் சங்கர்ராஜை கண்டுபிடித்துத் தரும்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிப திகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.கார்த்திகேயன் ஆகியோர், சங் கர்ராஜை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தாக் ல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்கள், கண்டுபிடிக்கப்பட்டவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

அரசுக்கு பாராட்டு

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் எம்.முகமது ரியாஸ், “இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னர், கடந்த அக் டோபர் 30-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 624 ஆண்கள், 1,469 பெண்கள், 128 சிறுவர்கள், 289 சிறுமிகள் என்று மொத்தம் 2,510 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்” என்றார். தமிழ்நாடு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டுவதாக நீதிபதிகள் கூறினர்.

3.04 லட்சம் பேர் மாயம்

பின்னர். தமிழ்நாடு டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. ஏ.பிரதீப் பெயரில் ஒரு அறிக்கையை கூடுதல் குற்றவியல் வக்கீல் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மாநில குற்ற ஆவண காப்பக தகவலின்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடந்த 16-ந்தேதி வரை, 10 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து 2 லட்சத்து 79 ஆயிரத்து 865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 575 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

15 ஆயிரத்து 959 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்த வழக்குகளில் தற்போது 15 ஆயிரத்து 134 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT