திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பத்தமடை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த பத்தமடையை சேர்ந்த ஐயப்பன்(எ) மணிகண்டன் (வயது 27) மற்றும் சபரிபாண்டி(29) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 33 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஐயப்பன்(எ) மணிகண்டன், சபரிபாண்டி ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 33 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.