தமிழக செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் - அர்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் - அர்ச்சனா பட்நாயக்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இந்தநிலையில்,

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவலின்படி,

பிரசாரம் ஓய்ந்த நிலையில் ஏப்.23இல் வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் நடத்தக்கூடாது. வேறு தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும்.

தேர்தல் விளம்பரத்தை திரைப்படம், டிவி, ரேடியோ, சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கத் தடை.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் இனி செயலற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகன ஏற்பாடு செய்ய வேட்பாளருக்கு அனுமதியில்லை.

இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த தேர்தல் பிரசாரம். அடுத்த 48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை. சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு. 75,064 வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை.

தேர்தல் பணியில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.