தமிழக செய்திகள்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சாவை பறிமுதல் செய்து போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவினரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.

சென்னை,

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இருந்து தமிழ்நாட்டின் திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் சென்னை வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஹவுராவில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. ரெயில் இன்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, ரெயிலில் உள்ள பெட்டிகளில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தனர்.

அப்போது, ரெயிலில் உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கீழே கிடந்தது. இதைப்பார்த்த ரெயில்வே பாதுகாப்புப்படையினர் அந்த பையை திறந்து பார்த்தனர். அந்த பையில் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள 3.5 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பாதுகாப்புப்படையினர் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்புப்படையினர் அதை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், ரெயிலில் கஞ்சாவை கடத்தி கொண்டுவந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT