தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த தாளமுத்துநகர் போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

போலீசார் ரோந்து பணி

தூத்துக்குடி டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

3.5 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி முத்தம்மாள்காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் கலைமணி (வயது 24), கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிராஜா(22) மற்றும் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ்(எ) கார்த்திக்(34) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

SCROLL FOR NEXT