தமிழக செய்திகள்

தர்மபுரியில் 36,516 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள்: கலெக்டர் அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தர்மபுரி,

இந்த மாதத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று உரிய பொது வினியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்படும். இது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரேஷன் பொருட்கள்

தர்மபுரி மாவட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்பட பொது வினியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 1,113 ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெறுபவர்களில் 36 ஆயிரத்து 516 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று பொது வினியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதன்படி இந்த மாதத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று உரிய பொது வினியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT