தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 117 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT