தமிழக செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூடுசம்பவத்தின் 3-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.