சென்னை,
தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“1. காலிப்பணியிட ஒதுக்கீடு தலைமை அலுவலகத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டி.என்.ஹரி கிரண் பிரசாத், ஐ.பி.எஸ், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஜி.சந்தீஷ், ஐ.பி.எஸ், பெருநகர சென்னை காவல்துறை, தெற்குப் போக்குவரத்துத் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. பெருநகர சென்னை காவல்துறை, தெற்குப் போக்குவரத்துத் துணை ஆணையராக பணியாற்றி வரும் கே.முத்துகுமார், சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துத் துணை ஆணையராக பணியாற்றி வரும் டி.ஈஸ்வரன், பள்ளிக்கரணை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.