தமிழக செய்திகள்

அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

புதுக்கோட்டையில் அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருபவர் அன்னக்கொடி (வயது 54). இவரது கணவர் காசி (60).

இந்நிலையில், நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு அவர் வெளியே சென்று உள்ளார். அப்போது அங்குள்ள 4 வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கலைமான், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு துணையாக இருந்ததாக அன்னக்கொடியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்