தமிழக செய்திகள்

கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

நேற்று காலை 6 மணி அளவிலேயே கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.

திருவண்ணாமலை

கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் அய்யங் குளத்தில் நடந்த சந்திரசேகரர் தெப்பல் உற்சவத்திலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மகா தீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட் டது. முன்னதாக கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும், மகா தீபத்தை காணவும் 23-ந்தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத்தொடங்கினர்.

நேற்று முன்தினம் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லத்தொடங்கினர். நேரம் செல் லச் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற னர். இரவில் கோவிலில் மகா தீபம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது.

40 லட்சம் பக்தர்கள்

அதன்பின்னர் இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன அதிகார நந்தி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மக் கள் வெள்ளத்தில் மாட வீதிகளில் உலா வந்தனர்.

தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் நேற்று காலை வரையில் கிரிவலம் சென்றனர். சுமார் 40 லட்சம் பக்தர்கள் கிரிவ லம் சென்றதாக மதிப்பிடப்படுகிறது. நேற்று காலை 6 மணி அளவிலேயே கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

தரிசனத்துக்கு 5 மணி நேரம்...

ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகலில் விட்டு, விட்டு மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கையில் குடை பிடித்த படியும், மழை கோட்டு அணிந்தபடியும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பல் உற்சவம்

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடக்கும். அதன்படி அருணாச லேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் முதல் நாளான நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. அங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் 3 முறை வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT