சென்னை,
சென்னை விமான நிலையத்தில் 4% கிலோ உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 28 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்திருந் தார். அவர் மீது சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், சூட் கேசுக்குள் துணிகளுக்கு மத்தியில் 49 பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட் டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகத்தின்பேரில் அந்த உணவு பாக்கெட்டுகளை திறந்து பார்த்தபோது, அதற்குள் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா 4 கிலோ 639 கிராம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்தனர்.
அவர் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரிடம் நடத்திய விசாரணையில், பட்டதாரியான அவர், வேலை இல் லாததால் பணத்துக்காக கஞ்சா கடத்தல் கும்பலுக்கு துணையாக செயல் பட்டது தெரியவந்தது. அவரிடம் கஞ்சா கடத்தி வரச் சொன்ன கும்பல் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.