சென்னை,
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 45-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து, தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., தந்தி 1, டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி, கோகுலம் கதிர், பரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள், நாடார் சங்க நிர்வாகிகள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட பலர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.