தமிழக செய்திகள்

இந்திய ரெயில்வேயில் இணையதளம் மூலம் 48.25 கோடி டிக்கெட்டுகள் முன்பதிவு

டிக்கெட் முன்பதிவு முறைகள் காலத்துக்கு ஏற்றவாறு நவீனமயமாக மாற்றப்படுட்டு உள்ளன.

சென்னை,

இந்தியாவில் ரெயில் பயணம் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து முறையாக இருந்து வருகிறது. தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணிப்பதால், டிக்கெட் முன்பதிவு முறைகள் காலத்துக்கு ஏற்றவாறு நவீனமயமாக மாற்றப்படுட்டு உள்ளன.

அந்தவகையில், இந்திய ரெயில்வே, 2025-26 நிதியாண்டில் (ஏப் ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை) 48.25 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் முன்பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் ஏறக்குறைய 88 சதவீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ரெயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.

ரெயில்வே டிக்கெட் முன்பதிவு முறைகள் டிஜிட்டல் மாற்றத்தால் மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளன. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.