தமிழக செய்திகள்

தமிழகத்தில் 5 கூடுதல் டி.எஸ்.பி.க்கள், 14 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

தேவக்கோட்டை டி.எஸ்.பி. கண்ணன், சென்னை குற்ற ஆவண காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக போலீஸ்துறையில் 5 கூடுதல் டி.எஸ்.பி.க்கள், 14 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.எஸ்.பி. கண்ணன் நெல்லை தலைமையக கூடுதல் டி.எஸ்.பி.யாகவும், திண்டுக்கல் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.எஸ்.பி. தெய்வம் திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி.யாகவும், ராமநாதபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் திருப்பூர் மாவட்டத்துக்கும்,

திண்டுக்கல் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ் கன்னியாகுமரி மாவட்டத்துக்கும், சிவகங்கை மாவட்ட தலைமையக கூடுதல் டி.எஸ்.பி. சுகுமார் திண்டுக்கல் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தேவக்கோட்டை டி.எஸ்.பி. கண்ணன், சென்னை குற்ற ஆவண காப்பகத்துக்கும், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. புருஷோத்தமன் ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கும் மாற்றப்பட்டனர். இவர்கள் உள்பட 14 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT