தமிழக செய்திகள்

தமிழ்நாடு - மேற்கு வங்காளம் இடையே கூடுதலாக 5 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

கோடைக்காலத்தில் ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாளும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

தமிழ்நாடு - மேற்கு வங்காளம் இடையே கோடை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை - சந்திரகாச்சி;

சென்னை எழும்பூரில் இருந்து 25-ந் தேதி, (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06051) மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து 26-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06052), மூன்றாம் நாள் காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது.

சென்னை - கரக்‌பூர்;

சென்னை எழும்பூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் கரக்‌பூர் ரெயில் நிலையத்திற்கும் 27ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட்டுகிறது.இந்த ரெயில் (வண்டி எண் 06053) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு கரக்பூர் ரெயில் நிலையம் சென்றடியும்.

மறுமார்க்கத்தில், 29ம் தேதி கரக்பூரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும், சிறப்பு ரெயில் (வண்டி எண் 06054) அடுத்த நாள் காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.

போத்தனூர் - கரக்பூர்;

போத்தனூரில் இருந்து வருகிற 21ம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், (வண்டி எண்; 06011) அடுத்த நாள் மாலை 5.15 மணிக்கு கரக்பூரிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இருந்து 22ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.

போத்தனூர் - கரக்பூர்;

போத்தனூரில் இருந்து வருகிற 25ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், (வண்டி எண்; 06065) அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு கரக்பூரிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இருந்து 27ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06066) அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.

சென்னை - டான்குனி;

சென்னை செனடிரலில் இருந்து 25-ந் தேதி, காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06037) மறுநாள் இரவு 11 மணிக்கு டான்குனி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், டான்குனியில் இருந்து 27-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06038), அடுத்த நாள் மாலை 3 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது.