திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்க சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூரை சேர்ந்த மாரியப்பன் மகன் குன்னிமலை (வயது 37) என்பவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் திருநெல்வேலி மாநகரம், பாளை மார்க்கெட் பகுதியில் பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் ஜெபஸ்டின் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெருமாள்புரம் மகிழ்ச்சிநகரை சேர்ந்த சண்முகம் மகன் சந்தோஷ்குமார்(32) என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களையும் , மேலும் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சாலை பகுதியில் பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது மணிக்கூண்டு அருகில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளை கோட்டூர் சாலையை சேர்ந்த சேது மகன் கணேசன்(68) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை இளங்கோநகரை சேர்ந்த சுப்பையா மகன் இளையபெருமாள்(49) என்பவரிடமிருந்து 30 மது பாட்டில்களையும், மேலும் பாளையங்கோட்டை, அசோக் திரையரங்கம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜ் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மகிழ்ச்சிநகரை சேர்ந்த சண்முகம் மகன் சந்தோஷ்குமார்(32) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகரில் நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 137 மது பாட்டில்களை நெல்லை மாநகர போலீசார பறிமுதல் செய்தனர்.