தவெக நிர்வாகி கொலை 
தமிழக செய்திகள்

சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை... 5 பேர் கைது

கொலை செய்யப்பட்ட கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை:

சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். சமீபத்தில் தவெகவில் இணைந்த இவர், நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பழிக்குப் பழியா?

அடையாறில் கடந்த 2009 சிவா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கண்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படும் நிலையில், சிவா தரப்பினர் நேற்றிரவு கண்ணனை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் B பிரிவு சரித்திர பதிவேறு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார் கண்ணன். அவர் மீது 2 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

SCROLL FOR NEXT