தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இதே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி வந்தார். தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வந்த நிலையில், தற்போது த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை பா.ஜ.க.வின் சின்னமான தாமரையில் த.மா.கா. போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், 5 தொகுதிகளில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது.