தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரெயில் சேவைகள்: நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்.

திருச்சி,

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது. மத்திய அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். அந்த வகையில் நாளை நெல்லை- மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை- காரைக்குடி, நாகர்கோவில்- சாரளப்பள்ளி அம்ரித் பாரத், கோவை- தன்பாத் அம்ரித் பாரத் ரெயில் ஆகிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

SCROLL FOR NEXT