தமிழக செய்திகள்

குமரியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு

ரெஜி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கோர்ட்டு அவரை குற்றவாளி என அறிவித்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2020-ம் ஆண்டு ரெஜி என்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், ரெஜி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கோர்ட்டு அவரை குற்றவாளி என அறிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி ரெஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13,000 அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT