தமிழக செய்திகள்

300 திருக்குறள் ஒப்பிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5,000 பரிசு - தமிழக அரசு ஆணை

போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் தலா ரூ. 5,000 பரிசு வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள அரசாணை நிலை எண் 206 இன்படி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 5ஆம்வகுப்புவரை பயிலும் மாணவர்களிடம் இளம் வயதிலேயே தமிழ் இலக்கிய ஆர்வத்தைவளர்க்கும் நோக்கில் இந்த முத்துக் குறள்பரிசுத்திட்டம்செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 5, 2026 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், தேர்வுசெய்யப்படும் முதல் 500 மாணவர்களுக்குப்பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,330 திருக்குறள்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குத் தலா ரூ. 15,000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படும் நிலையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக இந்தப் புதிய திட்டம் கூடுதலாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான பரிசுத்தொகை, மாவட்ட அளவிலான திறனாய்வுப் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கும்விழா செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.47லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளதால், இந்த அறிவிப் புக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

2026-2027 -ம் நிதியாண்டில் திருக்குறள் முற் றோதல் நிதியிலிருந்தும், 20272028 ஆம் நிதியாண்டு முதல் தொடர் செலவினமாகவும் நிதி ஒதுக்கி இந்தத் திட்டத் தைச் செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

விரைவில் 38 மாவட்டங்களிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டுத் தகுதியான மாணவர்கள்தேர்வுசெய்யப் பட உள்ளனர்.

SCROLL FOR NEXT