தமிழக செய்திகள்

தி.மு.க.வில் இன்று மாற்று கட்சியினர் 5 ஆயிரம் பேர் இணைந்தனர்

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னை,

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அக்கட்சியிலிருந்து விலகினார் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் தி.மு.கவில் இணைந்தார். தனது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்கும் விழா இன்று மாலை வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இணைப்பு விழா

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பா. பெஞ்சமின் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பெஞ்சமின் செய்துள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அ.தி.மு.கவில் அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும், அமைப்பு செயலாளராகவும் செயலாற்றி வந்த பெஞ்சமின் தி.மு.கவில் இணைந்து கட்சிப் பணிகளை செய்ய உள்ள நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

இணைப்பு விழாவில் பங்கேற்க வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கோயம்பேடு பகுதியில் இருந்து வானகரம் வரை வரவேற்று அழைத்துச் சென்றார். தி.மு.க. கொடி தோரணங்கள் சாலை முழுவதும் கட்டப்பட்டுள்ளன. விழா நடைபெற்ற மண்டபத்தை சுற்றியும் வழி நெடுகவும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நன்றி கூறினார்.