தமிழக செய்திகள்

நெல்லையில் 57 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

நெல்லை மாநகர பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை,

திருநெல்வேலி மாநகர பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 59) என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாளை மார்க்கெட் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையம்கோட்டை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரிடமிருந்து 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.