தமிழக செய்திகள்

சிறப்பு தகுதி தேர்வு தாள்-1: 59, 535 பேர் பங்கேற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 1,851 பேர் மட்டும் பங்கேற்கவில்லை.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்றும் மற்றும் நாளை (ஜூலை 4, 5) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு தாள் 1 தமிழகம் முழுவதும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 96.99% விண்ணப்பதாரர்கள்(59, 535 பேர்) பங்கேற்று தேர்வை எழுதினர். தேர்வில் 1,851 பேர் மட்டும் பங்கேற்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2025- ஆம் ஆண்டு உத்தரவிட்டது.