தமிழக செய்திகள்

லஞ்சம், முறைகேடு புகார்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

4 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நிதி முறைகேடு, லஞ்சம் மற்றும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் பெறுதல், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் வழக்கு

மேலும், இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், 4 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிடுள்ளார்.

ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த்ததாக மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகலா, ஜூலை 9-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT