தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சோபாவின் அடியில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் திரவியபுரம் 3-வது தெருவில் வசிக்கும் தனசேகரன் வீட்டின் அறைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சோபாவின் அடியில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

SCROLL FOR NEXT