தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவது யூனிட்டில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT