தமிழக செய்திகள்

திருநெல்வேலி சரகத்தில் 680 கிலோ கஞ்சா பறிமுதல்: டி.ஐ.ஜி. சரவணன் தலைமையில் தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து 680 கிலோ 929 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில், தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து 680 கிலோ 929 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அந்த கஞ்சாவினை அழிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் உத்தரவின்படி, சரக போதைப்பொருள் அழிப்பு குழுவின் (Drug Disposal Committee) பரிந்துரையின்படி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் தலைமையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம், பொத்தையடி பகுதியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.