விசாகப்பட்டின்ம்,
ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த 7 மீனவர்கள் சமீபத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமாகி இருந்தனர். அவர்களை மீட்பதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தின.
கடற்படை, கடலோர காவல் படை மற்றும் ஒடிசாவை சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து இந்த தேடும் பணிகளை நடத்தினர். அண்டை நாடுக ளான வங்காளதேசம், மியான்மர் கடற்பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடந்தது. இதன் பலனாக ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் கடற்பகுதியில் 7 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் படகு என்ஜின் பழுதானதால் அங்கேயே சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. கரையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் சிக்கியிருந்த அவர்களை மீட்ட அதிகாரிகள், பின்னர் பத்திரமாக கரைக்கு மீட்டு வரும் பணிகளை தொடங்கினர்.