தமிழக செய்திகள்

நெல்லையில் 7 ஆடுகள் திருட்டு: போலீஸ் விசாரணை

மேலப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர், வீட்டு அருகே ஆடுகளை வளர்த்து வருகிறார்.

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீடி காலனி பகுதியில் வசித்து வரும் ஜமால் மைதீன் மகள் மெஹமுதா பீவி (வயது 50) என்பவர் தனது வீட்டு அருகே ஆடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த ஜனவரி 30ம் தேதி இரவு தூங்க சென்று, காலையில் சென்று பார்த்தபோது ரூ.1.5 லட்சம் மதிப்புடைய 7ஆடுகள் காணாமல் போனது.

இதுகுறித்து அவர் பிப்ரவரி 13ம் தேதி, கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT