தமிழக செய்திகள்

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு;

1. கபில் குமார் சி. சரத்கர், -மதுரை காவல் ஆணையர் நியமனம்

2.மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த அபிஷேக் தீக்ஷித் ரயில்வே ஐஜியாக நியமனம்

3. ஜே. லோகநாதன்- போலீஸ் டெக்னிக்கல் சர்வீஸ் ஐஜியாக நியமனம்

4. டாக்டர் ஆர். திருநாவுக்கரசு, ஐபிஎஸ், கட்டாயக் காத்திருப்பில் இருந்த திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமனம்

5.சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து ஆணையராக பகவலவன் நியமனம்

6. திஷா மிட்டல், ஐபிஎஸ்,-சென்னை பெருநகர காவல்துறை மேற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு இணை காவல் ஆணையராக நியமனம்

7. பண்டி கங்காதர்-சென்னை மேற்கு டிஐஜி / இணை ஆணையர் சட்டம் ஒழுங்கு