மதுரை,
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.
இந்த நிலையில் குடும்பத்துடன் அஸ்வத் சொந்த ஊருக்கு வந்திருந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து காரில் கார் விபத்து: கார் விபத்து: புறப்பட்டனர். காரை அஸ்வத் ஓட்டினார்.
திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் காரில் இருந்த சவுமினி, உறவினர் மலர்கொடி(65) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.