தமிழக செய்திகள்

நெல்லையில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லையில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த 5 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் சிவமுருகன்(எ) முருகன் (வயது 36), மைதீன்லெப்பை மகன் புரோஸ்கான் யாசர்(29), சேக்தாவூத் மகன் சிந்தாமதார்(22), திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன்(29), ராஜ் மகன் ராகேஷ்(23) ஆகிய 5 பேரும் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவார்கள்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் (கிழக்கு), முறையே போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் (சந்திப்பு சரகம்), போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையங்கோட்டை சரகம் (பொறுப்பு) - மேலப்பாளையம் சரகம்), தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் & ஒழுங்கு) பத்மநாபபிள்ளை, மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் & ஒழுங்கு) செந்தில் தங்கத்துரை ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மேற்சொன்ன 5 பேரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி, பழையபேட்டை, கிருஷ்ணபேரியை சேர்ந்த மகாராஜன் மகன் பெரியராஜா(29) என்பவர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் (மேற்கு), போலீஸ் உதவி கமிஷனர் இளவரசன் (டவுண் சரகம்), பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் & ஒழுங்கு) அருள்பிரகாஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை, கொக்கிரக்குளம், தொல்காப்பியர் தெருவை சேர்ந்த நன்னி மகன் மாடசாமி(42) என்பவர், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் (கிழக்கு), போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையங்கோட்டை சரகம்), பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் & ஒழுங்கு) முத்துகணேஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.