சென்னை,
எழும்பூர்-கன்னியாகுமரி உள்பட 7 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06059), வருகிற 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) வரையிலும், மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06060), வருகிற 13-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06045), நாளை (4-ந்தேதி) முதல் 25-ந்தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06046), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு சென்டிரலில் இருந்து எழும்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (06126), வருகிற 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரையிலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (06125), வருகிற 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06028), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06027), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06070). இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை யிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (06030), வருகிற 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.