சுகுமார் 
தமிழக செய்திகள்

அரக்கோணம் அருகே 70 வயது முதியவர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீசார், சுகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதத்தால் மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் பகை இருந்து வந்துள்ளது.

முதியவர் வெட்டிக்கொலை

இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுகுமாரை வழிமறித்த மர்ம கும்பல், அவரைக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த சுகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

7 பேர் அதிரடி கைது

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீசார், சுகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய 7 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT