தமிழக செய்திகள்

கல்பாக்கம் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் சாவு

கல்பாக்கம் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய ஊழியர் ஆனந்தராஜ். இவரது மகன் அர்ஷத் (வயது 12). அணுசக்திதுறை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றான்.

அங்கு அர்ஷத் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தான். இதுகுறித்து கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணிநேரம் போராடி அர்ஷத் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT