தமிழக செய்திகள்

8 மணி நேரம் நடந்த சோதனை - ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’ - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னை,

தனது வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என அன்பில் மகேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

8 மணி நேரம்

அப்போது அவர் கூறுகையில், “காலை முதல் சுமார் 8 மணி நேரமாக எனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். எனது அனைத்து கோப்புகள் மற்றும் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தேன்” என்றார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

ஆளுங்கட்சியை விமர்சித்ததன் காரணமாகவே தனது வீட்டில் சோதனை நடைபெற்றதாக அன்பில் மகேஷ் குற்றம்சாட்டினார்.

“அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், அரசியல் மடைமாற்றத்திற்காகவும் எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

18-ம் தேதி

விசாரணைக்காக வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 'எதிர்த்து பேசினால் அடுத்த நிமிடம் ரெய்டு அடிப்பதா?. இந்த மாதிரி சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானபின் நேராக தாராபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். என்ன பொய் வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தை நாடி நீதியை நிலைநாட்டுவோம்’ என்றார்.

SCROLL FOR NEXT